Cooling Glass

போன் எடுக்காமல் இருந்திருக்கக்கூடாதுதான்.

ஆனால் சண்டை வராமல் என்ன காதல். என்ன லிவ்-இன். 

6 மணிக்கு போன் செய்தாள்.      

“டேய். ஸ்டாக் இருக்கா. வாங்கணுமா?”

“என்ன டி. ஆறு மணிக்கு இப்படி ஒரு கேள்வி கேக்குற?”

“இல்ல. நிக்கிதா அவளோட ‘லாஸ்ட்-நைட் ஸ்டோரி’ ஷேர் பண்ணாளா. அதான் கொஞ்சம் ‘க்ரீன்’ ஆயிடுச்சு.”

“என்ன மயிறு டிஸ்கஷன் டி இதெல்லாம். 2 இருக்கும்னு நெனைக்கிறேன். பத்துமா தெரியல சுஜி”

“இல்ல. எக்ஸ்ட்ரா வாங்கிக்கோ. வேஸ்ட் ஆகப்போற விஷயம் இல்லையே”

“அடிப்பாவி. தரமான சம்பவம் இருக்கு இன்னிக்கு”

சிரித்துவிட்டு போன்-ஐ வைத்தாள்.

7 மணிக்கு கால் செய்தாள்.

“எப்போ டா கெளம்பற. வாங்கிட்டியா.”

“வரப்போ வாங்கிக்கிறேன் டி. திருவான்மியூர் பக்கத்துல எங்கேயாச்சு. நீ கிளம்பிட்டியா?”

“10 மினிட்ஸ் மேக்ஸிமம். சரி சொதப்பிடாத.”

“நீ இவ்ளோ சொல்லி சொதப்புவனா. ஃபன் பண்றோம்”

“எப்பா டேய். நீ இந்த மாதிரி பில்டப் குடுக்கறப்போதான் ரொம்ப சொதப்பிருக்க. ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அதான் சொல்லுது. ஒழுங்கா வந்து சேரு”

“பக்கா பட்டு”

8 மணிக்கு போன் செய்தாள்.

9 மணிக்கு போன் செய்தாள்.

10 மணிக்கு போன் செய்தாள்.

10.01க்கு நான் போன் செய்தேன். ஸ்விட்ச்ட் ஆஃப். 

திடீரென மேனேஜருடன் மீட்டிங். சட்டென கிளம்ப முடியவில்லை. தரமான சம்பவம் எனக்கு தான் இருக்கும்போல என்று நினைத்துக்கொண்டு, திருவான்மியூர் ராமானுஜம் ஐடி சிட்டியிலிருந்து புறப்பட்டேன். அவள் கோபம் கொஞ்ச நேரத்திற்குதான். பார்த்தால் சரியாகிவிடும் என்று நினைக்கொண்டு கார்-ஐ எடுத்தேன். சுஜி என்னுடைய காலேஜ் சீனியர். வயது ஒன்றுதான். 

அவளுக்கொரு அக்கா திருமணமாகாமல் இருந்ததால் எங்களது திருமணத்தை உடனடியாக செய்துகொள்ள முடியவில்லை. 

உறவு வைத்துக்கொள்வதற்காக திருமணம் வரை காத்திருக்கவும் முடியவில்லை. 

வயதின் வேகம். 

ஈ.சி.ஆர் ரோட்டில் வெட்டுவாங்கேணியில் ஒரு அரசியல்வாதியின் பினாமி ஒருவருக்கு சொந்தமான வில்லா-வில் வீடு எடுத்து தங்கியிருக்கிறோம். அவள் ஐ.டியில் வேலை பார்க்கிறாள். நான் ஒரு கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனியில் ஆர்க்கிடெக்ட். 

வீட்டை வந்தடைந்தபோது வீட்டில் கரண்ட் இல்லை. அவளிடம் அடி வாங்கினால் சத்தம் கூட போடமுடியாது. விலாவில் மொத்தம் 10 வீடுகள். ஐந்து ஐந்தாக எதிரெதிரில் இருக்கும். நெருக்கமாக கட்டப்பட்டிருக்கும் வில்லா என்பதால் நாம் பேசுவது கொஞ்சம் வெளியே கேட்கும். கரண்டும் இல்லையென்றால் மக்கள் வெளியே வந்து வராந்தாவில் அமர்ந்துகொள்வார்கள். வில்லாவின் நடுவில் இருக்கும் ரோடுகளுக்கு மட்டும் எப்போதும் சோலார் விளக்குகள் இருக்கும். 

சுஜி, கோபமாய் இருக்கும் நேரங்களிலெல்லாம் ‘…த்தா’ என்று தான் தன் வாக்கியத்தை துவங்குவாள். வெளியே கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன்.

வீட்டின் வாசல் வரை சென்றுவிட்டு, பவர் வரும்வரை வெளியிலேயே காத்திருக்கலாமா என்று ஒரு நிமிடம் மறுபடியும் யோசித்தேன். மீட்டிங் முடிந்து அரக்கப்பரக்க ஓடி வந்ததால் ‘ஒண்ணுக்கு’ போக கூட நேரமில்லை. அதற்கு மேல் அடக்கிக்கொண்டால் ஆபத்து என்று எந்தப்பக்கமும் திரும்பாமல் நேரே பாத்ரூமுக்குள் சென்றேன். செல் போன் லைட்டை ஆன் செய்து யூரின் போய்விட்டு கதவை திறந்து சுஜியை தேடினேன். 

ஹால்-ன் ஜன்னலில் அமர்ந்து காபி மக்-கில் ஏதோ குடித்துக்கொண்டிருந்தாள். பக்கத்தில் போய் என்னவென்று பார்த்தால், பவண்டோ. இந்த ஐ.டி சீனுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. கோமியமே குடித்தாலும் அதற்கொரு ‘காபி மக்’ என நினைத்துக்கொண்டு, நானும் மீதமிருக்கும் ஜன்னலில் ஒரு பெடக்ஸ்-ஐ (பட்டக்ஸ்) மட்டும் அமர்த்திக்கொண்டேன். ஏதாவது தாஜா செய்து அவளை ஒத்துக்கச் செய்ய வேண்டும். 

ரொம்பவே மெளனமாக இருந்தாள். கத்தரிப்பூ நிறத்தில் வழுவழுவென்று ஒரு நைட்டி அணிந்திருந்தாள். தொட்டால் கத்துவாள். 

‘சாரி சுஜி’ என்றேன்.

அசரவில்லை. 

தரையில் அமர்ந்து அவள் கால் விரல்களை நெட்டி எடுக்க ஆரம்பித்தேன். வெடுக்கென காலை இழுத்துக்கொண்டாள். மீண்டும் ‘ஒற்றை பெடக்ஸ்’ பொசிஷனுக்கே வந்துவிட்டேன். 

அவளை கீழிருந்து மேலே நோட்டம் விட்டு இடுப்பருகில் வருகையில் ‘ஆஆ….’ என என் இரண்டு கைகளால் வாயை பொத்திக்கொண்டு ஆச்சர்யப்பட்டதுபோல் நடித்தேன். தன் ஓரக்கண்ணால் லேசாக பார்த்தாள். 

“ன்னா?” என்றாள்.

“ரெடியா தான் இருக்கியா?”

“த்தூ. ஒன்னும் கெடயாது கிளம்பு”

“அப்பறம் எதுக்கு இப்டி உக்காந்துருக்க?”

“உனக்கு இல்ல. நீ இன்னிக்கு ஹால்ல தனியாத்தான் தூங்குற.”

அவள் பேசி முடிப்பதற்குள் அவள் வாயை அப்படியே பொத்தி பின்னாலிருந்து தள்ளிக்கொண்டே பெட் ரூமுக்குள் இழுத்துச் சென்றேன். 

ஆண் பெண் சேர்ந்திருக்கும் எல்லா நாட்களிலுமே ஊடல்கள் எதேச்சைகளாகவும் எதார்த்தங்களாகவும் ஆகிவிடுகின்றன. ஆனால் ஏதோ இதுபோல் சொல்லி வைத்து விருப்பம் தெரிவித்து, அது சொதப்பி, அதற்காக தாஜா செய்து, சேட்டை செய்து, துணையின் கோபத்தை தனித்து, அதன்பின் கொள்ளும் ஊடல்கள் டைரியில் எழுதுவதற்கான மெட்டீரியல். 

உள்ளே இழுத்துச் சென்ற அதே வேகத்தில் ராக்கெட்டின் பாகங்கள் போல ஆடைகள் ஒவ்வொன்றாய் அதுவாக கழன்று விழுந்தன.

ஆரம்பமானதே 12 மணிக்கு. மொத்தம் 5 மணிநேரம். அதற்கிடையில் பாம்பின் குரலில் எக்கச்சக்கமாக கதை பேசினோம். ஆனால் ‘நானா நீயா’ என்று போட்டி போட்டு மூன்று முறை. அவளுடைய உப்பு உடம்பு திகட்டவே இல்லை. அந்த இரவு எங்களுக்கென்று அங்கங்கே கண்ணாடிகளிலும் மெழுகுவர்தியிலும் லேசான ஒளிக்கீற்றுகளை கசிய விட்டிருந்தது. போதும் என்று முடிவெடுத்து மீண்டும் கதை பேசினோம். 

மணி ஆறு. 

இருகப் பற்றிக்கொண்டு இருவருமே உறங்கிவிட்டோம்.

எட்டு மணிக்கு அவள் எழுந்து, குளித்து அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். 

எனக்கு கண்ணாடி போடாமல் கண் மங்களாகத்தான் தெரியும் என்பதால் என்ன அணிகிறாள் என்றெல்லாம் என் கண்ணுக்கு தெரியாது. என்ன நிறம் என்று மட்டுமே தெரியும். 

லேசாக கண்ணைத் திறந்து, “டயர்ட்-ஆ இல்லையா டி”

“இருக்கு. ஆனா வேலையும் இருக்கு”

“ஒரு நாள் லீவ் போடலாம்ல”

“உன்ன மாதிரி அவ்ளோ பெரிய பொசிஷன்ல நான் இல்ல தம்பி. நீ வேணா லீவ் போட்டுட்டு தூங்கு”

அப்போதுதான் கண்ணை இன்னும் கொஞ்சம் திறந்து பார்த்தேன். ஏதோ கருப்பான மேல் உள்ளாடையோடு நின்றிருந்தாள்.

“அதென்ன டி”

“எது?”

“நெஞ்சுல கூலிங் க்ளாஸ் மாட்டிருக்க?”

“சனியனே. அது ஸ்ட்ராப்லெஸ் ப்ரா”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *