fbpx

மனோபாரதி

திருவாரூர் மாவட்டம் ராஜமன்னார்குடியில் பிறந்து, சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் M.Sc. IT (Integrated 5 Years) படித்தவர்.

நான்கு வருடம் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவிட்டு தற்போது சென்னை அடையாறில் GODPARTICLES என்கிற விளம்பர வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், ஜெர்மனி, ஸ்ரீலங்கா முதலிய நாடுகளில் அமைந்திருக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர வடிவமைப்பு சேவையைச் செய்து வருகிறது GodParticles.

இந்த நிறுவனத்தின் கீழ் Spellink Mistake என்கிற சுய பிரசுரம் செய்ய விரும்பும் அறிமுக எழுத்தாளர்களுக்கான புத்தக வடிவமைப்பு நிறுவனமும், ‘எழுத்துப்பிழை’ பதிப்பகமும் இயங்கி வருகிறது.

எழுத்துப்பிழை, விகடகவி, கண்ணம்மா, மிட்டாய்ப் பயல் முதலிய புத்தகங்களின் வரிசையில் ‘கண் சிமிட்டல்’ மனோபாரதியின் நான்காவது புத்தகமாகும்.

சில தனியிசை ஆல்பம் பாடல்களுக்குப் பாடலாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

தொடர்புக்கு: mano@ezhuthupizhai.in | +91 99627 00810