எழுத்துப்பிழை அணி
எழுத்துப்பிழை ஆரம்பித்தது முதலே எழுத்துப்பிழைக்கென்று பிரத்தியேகமாக எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான குழுவை அமைத்துக் கொள்கிறோம். எங்களுடைய ஒவ்வொரு படைப்பிற்கும் நிறை மெனக்கடல்கள் இருக்கின்றன. புதிய இளம் புத்தக வடிவமைப்பாளர்கள் ஓவியர்கள் பிழைதிருத்துபவர்கள் விற்பனையாளர்கள் என அனைவரையும் ஒரு சேர அமைத்து ‘எழுத்துப்பிழை குழு’ என்று அமைத்துக் கொள்கிறோம்.
2015 ஆம் ஆண்டு முதல் புத்தகமான எழுத்துப்பிழை வெளியிடப்பட்டது.
இரண்டாம் புத்தகம்: விகடகவி
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. முதலாம் புத்தகமான எழுத்துப்பிழையின் இரண்டாவது பாகமாக விகடகவி வெளிவந்தது. இதில் சிறப்பென்னவென்றால் ஒரு கதையின் மையத்தை ஆண் – பெண் என இரண்டு கோணங்களில் கதை சொல்லப்பட்டிருக்கும். கதை சொல்லுதல் என்பதையே இந்த புத்தகத்தின் சிறப்பென கருதி விகடகவி எழுதப்பட்டிருக்கிறோம். விகடகவி – ஒரு கதைசொல்லி.
2017 ஆம் ஆண்டு கண்ணம்மா முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. வெளிவந்த ஆறே மாதத்தில் 1500 பிரதிகள் விற்று சாதனை படைத்தது கண்ணம்மா. பொருளாதார நெருக்கடிகளால் சில மாதங்களுக்கு மீண்டும் அச்சிட முடியவில்லை. ஆறு மாதத்திற்கு பின்னர் மீண்டும் 1500 பிரதிகள் அச்சிடப்பட்டது. அதுவும் விற்றுத் தீர்ந்த பின்னர் மீண்டும் பொருளாதார நெருக்கடிகளால் கண்ணம்மா அச்சுக்கு அனுப்பப்படவில்லை.
எங்களால் எழுத்துப்பிழைக்கென்று தனியாக குழு அமைத்து செயல்பட முடியவில்லை. கொரோனா காலகட்டங்களையெல்லாம் கடந்து 2020 ஆம் ஆண்டு மீண்டும் எழுத்துப்பிழையை புதுப்பிக்க முயற்சி செய்தோம். ‘கண்சிமிட்டல்’ என்னும் புத்தகம் எழுத்துப்பிழையின் நான்காவது புத்தகமாக வெளியிடப்பட்டது. கண்சிமிட்டலில் உள்ள கதைகளைப் படித்து முடிப்பதற்கு உங்களுக்குத் தேவையான நேரம் ஒருசில ‘கண்சிமிட்டல்’களாக இருக்கலாம். வாய்ப்புகள் அமையும் போது ஒரு குளம்பியுடனோ தேநீருடனோ சில கண் சிமிட்டல்களைப் பரிமாறிக்கொள்வோம்.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி மிட்டாய்ப்பயல் என்னும் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இதுவரை எழுத்துப்பிழை குழுவிலிருந்து ஐந்து புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.