Vikatakavi

150.00


‘எழுத்துப்பிழை’யின் இரண்டாம் புத்தகம் ‘#விகடகவி’- #எழுத்துப்பிழை2.0. முழுக்க முழுக்க சிறுகதைகள். சில கதைகள் எழுத்துப்பிழை 1.0வின் தொடர்ச்சியாக அமைந்திருக்கின்றன. ‘விகடகவி’எண்ணும் சொல்லை எந்தப் பக்கத்திலிருந்து படித்தாலும் விகடகவி என்றே வருவது போல நம் ‘விகடகவி-எழுத்துப்பிழை2.0’-விலும் ஒரு சில கதைகளை ஆண் பெண் இருவரும் அவரவர் POV(பாயிண்ட் ஆஃப் வியூ)-யில் சொல்கிறார்கள். இந்த புத்தகத்தின் சில கதைகளின் தலைப்பையும் எதைப்பற்றிய கதை என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன்.

1. சின்ன தாய் அவள்

இந்த தலைப்பு ‘தளபதி’ படத்தில் கவிஞர் வாலி எழுதிய ‘சின்ன தாய் அவள்’ பாட்டின் மீதுள்ள பிரியத்தாலும் வாலி மீதுள்ள அன்பினாலும் வைத்தது. மகனுக்கும் அம்மாவுக்குமான அன்பு என்பது இந்த உலகமே அறிந்தது. இந்த கதையில் ஒரு மகனின் உணர்வுகளை அவன் அசைவையும் உடல் மொழியையும் வைத்தே ஒரு அம்மா எப்படி புரிந்துகொள்கிறார் என்பதை கதையாய் சொல்கிறது.

2. நிச்சயதார்த்தம் 1.0

பெண் பார்க்கும் சம்பிரதாயத்தின்போது ஒரு ஆணின் எதார்த்த உடல்மொழி ஒரு பெண்ணை எளிதில் ஈர்த்துவிடுகிறது. அதனை அவள் விவரிக்கும் விதம் மற்றும் அங்கே நடக்கும் சில காட்சிகளை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து கதை சொல்கிறது – நிச்சயதார்த்தம்1.0

3. நிச்சயதார்த்தம் 2.0

பெண் பார்க்கும் சம்பிரதாயத்தின்போது ஒரு பெண்ணின் அதீத மகிழ்ச்சி ஒரு ஆணை எளிதில் ஈர்த்துவிடுகிறது. அதனை அவன் விவரிக்கும் விதம் மற்றும் அங்கே நடக்கும் சில காட்சிகளை ஒரு ஆணின் பார்வையிலிருந்து கதை சொல்கிறது – நிச்சயதார்த்தம்2.0

4. அம்மா 1.0

வேலை இல்லாத பட்டதாரியாய் இருக்கும் ஒரு மகனுக்கும் அப்பாவுக்கும் நடக்கும் ஒரு தொலைபேசி உரையாடல்.

5. அம்மா 2.0

அம்மா1.0-வின் இன்னொரு பார்வை.

6. ராதை

நாட்டின் வெவ்வேறு மூளைகளில் நாம் ஒவ்வொரு நாளும் ‘திருநங்கை’களை கடந்தே வந்திருக்கிறோம். ஏதோ ஒரு வெறுப்பு நம்மையும் அறியாமல் நம்மில் நிறைந்துகொள்கிறது. எல்லா திருநங்கைகளையும் அப்படி வகைப்படுத்திவிடமுடியாது. ராதை எனும் பாத்திரத்தில் வரும் ‘திருநங்கை’ நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் எண்ணத்தையும் பார்வையையும் கொஞ்சம் மாற்றினால் அதுவே இந்த கதையின் வெற்றி என்பேன்.

7. லில்லிபுட்

கட்டை விரல் அளவில் உள்ள மனிதன். ஒரு கற்பனை முயற்சி இந்த கதை. மனிதனை விட வலிமை அதிகமாக உள்ள அந்த ‘குட்டி மனிதன்’, ஒருவனிடம் வாழ்க்கை பிச்சை கேட்டு மாட்டிக்கொள்கிறான். அதை சாக்காய் வைத்துக்கொண்டு அந்த ‘லில்லிபுட்’ஐ எப்படியெல்லாம் உபயோகித்துக்கொள்கிறான் என்பதே இந்த கதை.

8. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு…

ஒரு பெண். அவளுக்கான கனவுகள். அவை தன் பெற்றோராலேயே எப்படி தவிடுபொடி ஆகிறது என்பதே ‘பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு’. இது சில இடங்களில் இந்திய பெற்றோரின் மனநிலையையும் சில இடங்களில் இந்திய பெண் குழந்தைகளின் மனநிலையையும் அவர்களின் கனவையும் பற்றிப் பேசுகிறது.

9. என் இனிய தமிரழகா..

‘விகடகவி’யில் என் மனதிற்கு நெருக்கமான கதை. ஆணின் திமிரை பெண்ணின் பார்வையில் எழுதியிருக்கிறேன். ‘அவன் திமிர விட என் அழகு கம்மிதான்’ என்று அவள் விவரிக்க ஆரம்பிக்கும் இந்த கதை லேசான நிகழ்வுகளை கடந்து ஒரு பரபரப்புடன் முடிகிறது.

10. திமிருக்கரசி

மேலே முடிந்த கதை கதாநாயகனின் பார்வையிலிருந்து தொடர்கிறது. ஏன் அவள் திமிருக்கரசி என்பதை விவரிக்கிறது இக்கதை.

11. கோ

கோ – அரசன். எல்லாருக்கும் எதேச்சயாகவே எழும் ஒரு கேள்விதான். ஒரு ஆண் தன் தோழியை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். அதற்கு அவள் தன் தந்தை சொல்லுபவரையே திருமணம் செய்து கொள்வேன் என்கிறாள். பெரிய தலைமுறை விரிசல் இருக்கும்போது எப்படி ஒரு 50 வருடம் சேர்ந்து வாழப் போகும் ஒருவரை உன் தந்தை தேர்வு செய்யமுடியும் என்பது அவனது கேள்வி. அதற்கு அவள் சொல்லும் பதில் அதற்கான உதாரணங்களும் தன் தந்தையை ஏன் ‘கோ’என்கிறாள் என்பதுமே இக்கதை.

12. உயிர்வலி

இது ஒரு காதல் தோல்வியின் விளிம்பில் நிற்கும் ஒரு காதலன் காதலியின் உரையாடல். உரையாடலின் மொழி கண்பார்வை.

13. காயாம்பூ

எழுத்துப்பிழை1.0வில் இருந்த கனவுத்தோழியின் தொடர்ச்சி. கனவுத்தோழியில் நாயகியாய் இருந்த ‘அனு’ எப்படி காயாம்பூ ஆனால் என்பதே இக்கதை. ஒரு 61 வயது ஆணுக்கும் 59 வயது பெண்ணுக்குமான காதல்.

14. த்வானி 1.0, 2.0, 3.0

பெண்குழந்தையை பெற்ற அப்பாக்களுக்கான கதைகள்.

15. அலைபாயுதே 2.0

இந்த கதையும் எழுத்துப்பிழை1.0வின் தொடர்ச்சி. தலைப்புக்கு ஏற்றவாறே மணிரத்னம்-ன் அலைபாயுதே-யில் வரும் கார்த்திக்,சக்தி என்ற பெயர்களை உபயோகித்திருந்தேன். அவர்களின் காதல் காதல் காதல் இந்த கதை.

SKU: EP00002 Categories: ,

Description

Book Details

Weight 0.1 kg
Dimensions 2 × 14 × 22 cm

Reviews

Reviews

There are no reviews yet.

Be the first to review “Vikatakavi”

Your email address will not be published. Required fields are marked *