வாழ்கை அழகானது

 • ஆடையை நனைக்காமல் பாதத்தைத் தொட்டுச்செல்லும் கடல்
  அலைகள்
 • கரையைக் கீறி ஓவியம் வரையும் நண்டுக்குஞ்சுகள்
 • பனியெனப் பெய்து முகம் நனைக்கும் மழைத் துளிகள்
 • வெற்றி பெறாத நாட்களில் கூட ‘நீ நல்லா வருவ டா’ எனச்சொல்லி
  அம்மா தரும் நெற்றி முத்தம்
 • அம்மாச்சி வைத்த புளிக்குழம்பில் நறுக்கிப் போடப்பட்ட
  முருங்கைக்காயின் நடுவில் தேங்கி நிற்கும் புளிப்புச் சுவை
 • அரைகுறையாய் பொரிந்த கடைசி ஒற்றை மொறுமொறு சோளப்பொரி
 • மேலே ஏறியும் கடிக்காமல் நடந்து போகும் நெருப்பெறும்பு
 • வலிக்காமல் நர்ஸ் போடும் காய்ச்சல் ஊசி
 • அலுவலகம் வரை அழுக்காகாமல் இருக்கும் வெள்ளைச் சட்டை
 • ஃபெயிலான கணக்குப் பரீட்சை பேப்பரில் திட்டாமல் அப்பா போடும்
  கையொப்பம்
 • அண்ணனுக்கு கால் பிடித்துவிடும் தங்கை
 • அக்காவுக்கு ஜடை பின்னிவிடும் தம்பி
 • 1% சார்ஜ்-ன் போது வந்து சேரும் விருப்பமானவளின் முத்த ஸ்மைலி
 • வால் பகுதி குழம்பு மீன்
 • கடலில் விழுந்துகிடக்கும் முழு நிலவு
 • விடிந்தும் முடியாத முதல் இரவு
 • காமம் நீர்த்த பின் கிடைக்கும் காதலனின் கழுத்து முத்தம்
 • கணவன் மாட்டிவிடும் ஜாக்கெட் கொக்கி
 • உங்கள் கோமாளி செய்கையை பார்த்து அழுகையை நிறுத்தும்
  பச்சை குழந்தை
 • ஊரே கண்டு கொள்ளாத அழுக்குப் பிச்சைக்காரனுக்கு காரிலிருந்து
  மினரல் வாட்டரை எடுத்து அருந்தத் தரும் பணக்காரி
 • முழுவதும் நிரப்பப்பட்ட உடையாத பாணி பூரி
 • புயலில் கூட கலையாமல் இருக்கும் குருவிக் கூடு
 • பெரும்விபத்திலிருந்து மயிரிழையில் தப்பி வந்த உயிர்
 • முகம் தெரியாதவர் உங்கள் உயிரைக் காப்பாற்ற தானம் தரும் ரத்தம்
  58
 • எதிர்பாராத நேரத்தில் நண்பனிடமிருந்து உதவிக்கு வந்து சேரும்
  பணம்
 • எதிர்பார்ப்பின்றி அன்பை அள்ளித் தரும் தோழியின் மனம்
 • காதலியின் புன்னகை, தூக்கக் குரல், சுண்டு விரல் நுனி, உதட்டு
  ரேகையின் சுவை, கர்சீஃப்பில் படிந்த வேர்வை வாசனை…
  என வாழ்க்கை எங்கும் சுவாரஸ்யங்கள் நிரம்பிக் கிடக்க ‘தனிமை’யைத்
  திருத்தி ‘இனிமை’ என்றெழுத என்ன தயக்கம்?

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *