நான் என்னும் தமிழ் மங்கை

நான் என்னும் தமிழ் மங்கை..!!
‘உன்னை என் கைகளில் ஏந்திய அந்நாளில் என் தாய் மீண்டும்
பிறந்தாள்’, என்றார் அவர்.
‘உன் கையோடு என் கைகோர்க்கும்போது என் தாயை மீண்டும்
உணர்கிறேன்’, என்கிறான் அவன்.
‘எனக்கு இரட்டை ஜடை பின்னி அழகி’ என மெச்சினார் அவர்.
‘என் காதோரம் அவிழ்ந்த கூந்தலை சரிசெய்து தேவதை’ என்கிறான்
அவன்.
எனக்கு கணிதம் சொல்லிக்கொடுத்தார் அவர்.
எனக்கு உலகம் கற்றுக் கொடுக்கிறான் அவன்.
தூசி விழுந்த கண்ணில் ஊதி குளிர்ச்சி செய்தார் அவர்.
தூர நாட்களை கணக்கிட்டு அரவணைத்துக் கொள்கிறான் அவன்.
என் நெற்றியில் முத்தமிட்டு வெற்றிக்கு வாழ்த்து சொன்னார் அவர்.
என் வெற்றிக்கே காரணமாகி என் வாழ்விலே இடம் கேட்கிறான் அவன்.
‘அவனே என் மன்னவன்’ என்றதும் அதிர்ந்து போய் மருத்துவமனையில்
அவர்.
‘நீ இல்லையேல் என் உயிரும் இல்லை’ என சுய அழிவில் அவன்.
அவர் – என் அப்பா.
அவன் – என் காதலன்.
இவர் என் கண்களால் என் உலகம் காண ஆசைதான்.
ஆனால் ஒரு கண் இன்னொரு கண்ணை குருடாக்கச் சொல்கிறது.
கண்தானம் ஒன்றே வழியென
‘தற்கொலை’ முடிவில் நான்.
நான் என்னும் தமிழ் மங்கை.. !!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *