தீபாவளி பயணம்

தீபாவளிக்காக 850 ரூபாய் வயிற்றெரிச்சலில்
ஒரு நெடுந்தூரப் பயணம் சொந்த ஊர் நோக்கி
ஈ.சி.ஆரில் சிறிய இடைநிறுத்தம்
‘சார். பஸ்ஸு பத்து நிமிஷம் நிக்கும்
டீ சாப்புடுறவங்க சாப்புட்டுக்கலாம்‘
பேருந்து முழுவதும் வெளியிலிருந்து
காலியான பிளாஸ்டிக் வாட்டர்பாட்டிலால்
தட்டித் தட்டி கூவிக் கூவிச் சொன்னான்
ஒரு கூலிக் குழந்தைத் தொழிலாளி
சில விழிகள் லேசாய் திறந்தன
துப்பட்டாவால் முகமூடி அணிந்த சில இளமங்கைகள்
தூக்கத்திலும் இயர்போனில் எமினெம் கேட்கும் சில இளந்தமிழ்
இரத்தங்கள்
அங்கங்கே சில குறட்டைகள்
அங்கங்கே வெளிச்சத்தில் முகம் காட்டும் சில மொபைல் அடிமைகள்
அங்கங்கே லேஸ் சிப்ஸ்-ன் ஆடை கிழிக்கப்பட்டு கொஞ்சம்
கொலஸ்ட்ரால் உண்ணப்பட்டது
அங்கங்கே ஃபேண்டாவின் தலை திருகப்பட்டு கொஞ்சம் அமிலம்
பருகப்பட்டது
அந்த ரம்மியமான இரவில்
அழகாக ‘அழுகைப்பாட்டு’ பாடிக்கொண்டிருந்தாள் ஒரு குட்டி
தேவதை…
அவள் நெற்றி, கன்னங்கள், பாதங்களில்
அவளது தாயில் கருப்பு கை மைரேகைகள்
திருஷ்டிப்பொட்டுகளாய்…
அவளது தந்தை அவளைத் தூக்கிக்கொண்டு பேருந்தினுள்ளேயே
அங்கும் இங்கும் நடந்தார்
அழுகைப்பாட்டு சில குறட்டைகளைக் குறைத்தது
54
பால்புட்டி எடுத்து ஊட்ட முற்பட்டார்
மிச்சமீதிக் குறட்டைகளும் காணாமல் போயின…
அவளது தாய் விழித்துக்கொண்டாள்.
‘என்னங்க ரொம்ப நேரமா அழறாளா?’
‘இல்லம்மா.. இப்பதான்… நீ தூங்கு… நான் பாத்துக்கறேன்…’
மொபைலைக் காட்டினார்
மேலே எரியும் நீல விளக்கைக் காட்டினார்
விளையாட்டுக் காட்டினார்
அழுகை நிற்கவில்லை…
தன் கணவன் தவிப்பதைக் கண்ட தாய்
அந்த முத்துச் சொத்தை தன் கைகளில் வாங்கி
தன் மார் படுக்கையில் கிடத்தி
அக் குழந்தை கையிலேயே பால்புட்டியைக் கொடுத்தாள்…
அழுகையை நிறுத்திய அக்குழந்தை
முழுப் பாலையும் நிறுத்தாமல் குடித்தாள்…
அப்பன் போல் தெம்பாய் ஆனது குழந்தை
அப்பன் முகமோ குழந்தைபோல் ஆகிவிட்டது…
ஒரு ஆண் என்னதான் ஆ………………ண் என்ற கர்வம் கொண்டாலும்
ஒரிடத்தில் தடம் தெரியா சுழி ஆகிறான்,
‘தாய்’ என்னும் இறையிடத்தில்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *