நான் ஒரு நாடோடி…
கிழிந்த ஆடையும்
கொடூர மிருகத்தை ஒத்த தோற்றமும் என் அடையாளம்…
குழந்தைகள் என்னைக்
கண்டு அஞ்சி ஓடும்…
உலகம் என்னைப் பார்த்தாலே
உமிழ்நீரைத் துப்பும்…
பார்த்தவுடனே என்னை
பைத்தியம் என்றும், முட்டாள் என்றும் பகுத்து விடுவர்…
கடவுளை நான் கண்டதுமில்லை..
கடவுளால் படைக்கப்பட்டது என்னும் பட்டியலில் என் பெயரும் இல்லை..
பசி என் தினசரி சாப்பாடு – நடு
நிசி நான் சுற்றித் திரியும் சுதந்திர நேரம்…
அப்பனும் அறியாது…
அம்மாவும் தெரியாது….
விளக்குகள் குறைவாக உள்ள
விலைமாதர் கொட்டகையில்
விந்து மட்டுமே பீய்ச்சத் தெரிந்த
ஈனப் பிறவிக்குப் பிறந்த
ஊனப் பிறவி…
ஆறுதல் என்று ஒன்றிருப்பின்…
எனக்கு உலகம் முழுதும் நண்பர்கள்..
‘அனாதை’ என்னும் ஒரே பெயரில்..
அனாதை
